PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

நிலாவே வா செல்லாதே வா...




Song : Nilaave Vaa
Movie : Mouna Raagam
Singer : S.P.Balasubramaniam
Year : 1986

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா செல்லாதே வா

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாள் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
அகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணனே

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்...

4 comments:

  1. Fine song.unforgetable lyrics.Evergreen song.Illayaraja is the king of music.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. "அகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணனே" என்று நினைக்கிறேன் :)

    ReplyDelete