PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

பூங்கொடிதான் பூத்ததம்மா...

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்



பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன் வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா
(பூங்கொடி..)

ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடம் தன்னில் எறிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கடஹ்வுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப்போல்
(பூங்கொடி..)

தாய்க்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானே
பசியென்று பறிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்கு காதலென்ன ஊமைக்கும் பாடலென்ன ஓ
(பூங்கொடி..)


No comments:

Post a Comment