PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி...

பாடல் : Aasayile Pathi Katti
படம் : எங்க ஊரு காவல்காரன்
பாடியவர் : பி.சுசீலா
வருடம் : 1988

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே நீதான் பாட வச்சே
நானா பாடலியே நீதான் பாட வச்சே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது
பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு
நீ வாயேன் வழி பாத்து

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி

கண்ணுதான் தூங்கவில்ல காரணம் தோணவில்ல
பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே நீதான் பாட வச்சே
நானா பாடலியே நீதான் பாட வச்சே

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி...

No comments:

Post a Comment