PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

செண்பகமே செண்பகமே...




Song : Shenbagame Shenbagame
Movie : Enga Ooru Pattukaran
Singer : Mano
Year : 1987

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்ன பின்னாலே
எப்போதும் உன்ன தொட்டு பாடப் போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலை முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுப் பூ நாசிப் பத்திப் பேசிப் பேசித் தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே...

No comments:

Post a Comment