PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி...




Song : Velli Kolusu Mani
Movie : Pongi Varum Kaveri
Singers : Arunmozhi, Chithra
Year : 1989

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேர்த்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்
பொன்னி நதிப்போல நானும் உன்ன
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா
காத்து காத்து நானும் பூத்துப் பூத்துப் போனேன்
சேர்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன்
உன் பேரச்சொல்லி பாடி வச்சா ஊருதம்மா தேனே

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேர்த்ததென்ன

கண்ணத் தொறந்தேன் நெஞ்சில் விழுந்த
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரம்தான்
கண்ணத் தொறக்காம மூடிகிட்டேன்
நெஞ்சில் வச்சு அடச்சு புட்டேன்
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டி புட்டேன்
சாவியத்தான் தொலச்சு புட்டேன்
உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகப் போல நானும் உருகிப்போனேன் கேட்டு
காலமெல்லாம் கேட்டிடத்தான் காத்திருக்கேன் பார்த்து

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேர்த்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன...

No comments:

Post a Comment