PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, August 13, 2011

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக...



Song : Kannale Kadhal
Movie : Aathma
Singers : K.J.Yesudas, S.Janaki
Year : 1993

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

கடற்கரை தனில் நீயும் நானும் உலவும் பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம்மேனி உன் வசமோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக

உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் தன் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக...

No comments:

Post a Comment