PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, December 9, 2011

கண்மணி காதல் வாழ வேண்டும்...

Movie Name:: Oru Oorla Oru Rajakumari
Music Director
:: Ilayaraja
Lyricist
:: Vaali
Singer /s
:: Mano,Swarnalatha

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்
கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்
இந்த மௌன நாடகம்
மெல்ல களைந்து போகவே
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா
கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

மாடம் பொன் மாடம் என்றாலும்
மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா
கண்ணில் உலாவும் நிலாவே
கையில் வராமல் நீ போவதா
காதல் தோற்றால் கண்கள் தூங்குமா
நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா
அலை பாயும் நெஞ்சம் oh
இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

பூவே செம்பூவே உன் பேரை
தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா
பொன்னே செம்பொன்னே உன் மாலை
தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ
ராஜ வம்சம் எனை ஏற்குமா
ஏழை என்றே எனை பார்க்குமா
அலை பாயும் நெஞ்சம் oh
இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்
இந்த மௌன நாடகம்
மெல்ல களைந்து போகவே
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா
கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்...

No comments:

Post a Comment