PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, December 9, 2011

நீ எங்கே நீ எங்கே இதயம் இன்று துடிக்கிறது...


நீ எங்கே நீ எங்கே இதயம் இன்று துடிக்கிறது
என் அன்பே என் அன்பே மனசும் சிலுவை சுமக்கிறதே
நெஞ்சோடு நீ வேண்டும் இல்லை என்றால் நீ வேண்டும்
நான் கண்ணாடி சிற்பம் தான் கல் வீசி போகாத நீ
முதல் இன்பம் இது என்றால் இது போதும் உன்னை சேர்ந்தால்

வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது
இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது

உன் பெயரை சொல்லாத நேரத்திலே என் ஆசை அணைக்கட்டும் கோவத்திலே
உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தங்காது
நகக்கண்கள் அதிலும் அழுதல் அது கூட போதாது
நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகனேன்
என் ரத்தத்தின் ஒரு பாதி கண்ணீராய் வெளி ஏறுதே
ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்

மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாக சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றல் அது போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமி அது போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்...

சம்மிந்து நிற்கின்ற கிரகம் இது நீயின்றி வாழ்கின்ற நான் தான் அது
உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம்
உன்னிடத்தில் உயிர் விட தானே மீண்டுமோர் சந்தர்ப்பம்
மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான்

அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தங்கிக்குமோ
இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்...

No comments:

Post a Comment