படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
(நின்னுக்கோரி)
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்
(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)
பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது
(நின்னுக்கோரி)...
No comments:
Post a Comment