PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, December 15, 2011

வாடி வாடி CUTE பொண்டாட்டி...


ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி
I LOVE U TILL YOU ARE A பாட்டி..
தேவையில்லை வைப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை DAILY நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி..
வாடி அடி.. வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...டி டி டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
I love You Till You Are A பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
எனக்கு தேவை இல்ல வைப்பாட்டி
I LOVE YOU DI MY பொண்டாட்டி....

No comments:

Post a Comment