PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, December 9, 2011

என்ன சத்தம் இந்த நேரம்...

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து



என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா.. அடடா..

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லை
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமே
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்...

No comments:

Post a Comment