படம் : செண்பகமே செண்பகமே
இசை : இளையராஜா
குரல் : ஜானகி , மனோ
வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது
வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன
பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..
நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..
நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..
நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..
ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..
வாசலிலே பூசணிப்பூ...
மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு
மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ
கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..
கேள்வி போல என்னை வாட்டுது
ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு
பள்ளத்துக்கு ஓடிவரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்
ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி
என்னை இப்ப கிள்ளாதே
போதும் போதும் கண்ணால்
என்ன கட்டி இழுக்கற செண்பகமே!
வாசலிலே பூசணிப்பூ...
No comments:
Post a Comment