PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, March 20, 2012

ஸ்ரீரங்க ரங்க நாதனின்...

படம்: மகாநதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மகாநதி ஷோபனா, உமா ரமணன்




ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
(ஸ்ரீரங்க...)

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை நஞ்சை புஞ்சங்கள் தானடி
ஊர் வஞ்சம் என்ன கூருவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி...

3 comments:

  1. மிக அற்புதமான வரிகள்.இளையராஜா அவா்களால் ஹம்சத்வனி ராகத்தில் இசையமைக்கப்பட்டு பாடகா்கள்எஸ்பி.பி..மகாநதிசோபனா..உமாரமணன் அவா்களின் இனிமையான குரலி்ல் கேட்பது மிக அற்புதமாக இருந்தது.இந்தபாடல் தமிழில் எழுத்துவடிவில் தந்தமை மிக உபயோகமாக உள்ளது..

    ReplyDelete