படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)
பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்...
No comments:
Post a Comment