PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, March 20, 2012

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின்...

படம்: யூத்
இசை: மணிஷர்மா
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்




சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேந்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இலையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான்
நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்சி இல்ல
பாடம்படி பவள கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிறப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையல்லையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை எனும் நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடையே பிழை இல்லையே
துன்பமென்ற சிற்பிக்குள்தான் இன்பமென்று முத்து வரும்
துன்பத்தின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டிக்கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முல்லுக்கு நன்றி சொல்...

No comments:

Post a Comment