PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, March 12, 2012

கண்கள் ஒன்றாகக் கலந்ததால்...

திரைப்படம் : சேரன் பாண்டியன்
பாடியவர்கள் : மனோ, சித்ரா
இசை: சௌந்தர்யன்



கண்கள் ஒன்றாகக் கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட மலர்ந்ததோ
(கண்கள் ஒன்றாக)

வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்

(கண்கள் ஒன்றாக )

மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையைக்கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்

(கண்கள் ஒன்றாக )

ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா...

No comments:

Post a Comment