PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, August 20, 2010

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...

தூளியிலே ஆடவந்த (சின்ன தம்பி)
குரல்: மனோ, சித்ரா
வரிகள்:


தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அறபுத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே)

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்ச நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே)

சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே)

No comments:

Post a Comment