PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, September 8, 2009

ஓ திவ்யா ஓ திவ்யா...






ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திரு முகம் காட்டி உயிர் காப்பாயா

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா


எனக்காக என்னை பற்றி யோசிக்க தான் நீ வந்தாய்
அழகாகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தை
வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலை ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான்
உன் பேரை சொல்லி போகிறேன்
இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் இரும்பை போல
உன் காதல் ஏந்தி செல்கிறேன்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் ஒரு நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா


முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை
உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதே
ம்ரிதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே
உனக்காக தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை
உனக்காக துறந்தும் வைக்கிறேன்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் ஒரு நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

1 comment: