PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, January 15, 2012

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ...


ஏதோ தன்னாலே உன் மேலே ....காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ....

அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா
அஸ்கா அஸ்கா அஸ்கா அஸ்கா

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஹுச்க் ஹுச்க் ....அஸ்கா அஸ்கா

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் ..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்...

உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன் ....

ஏதோ தன்னாலே உன் மேலே ....காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே ....

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படித்தேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படித்தேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் ஒ.. ஓ...

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
காதல் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணிணி உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

ஓ...அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே...


Ask - Turkish
Laska - Slovak
Amour - French/Spanish
Ai - Chinese
Ast - Icelandic
Liebe - German
Ahava - Hebrew
Bolingo - Lingala
Cinta - Malay
Ishq - Arabic
Meile - Lithuanian
Love - English
Ishtam - Telugu
Premam - Malayalam
Pyaar - Hindi
Kaathal - Tamil

No comments:

Post a Comment