படம்: அமைதிப்படை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின்
நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?
உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்.. ஓ..ஓ..ஓ..ஓ
குற்றம்புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்.ஓ..ஓ..ஓ..ஓ
அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போன பின்னும்
காயங்கள் ஆறவில்லை..ஓ..
வேதனை தீரவில்லை
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?
தொட்ட குறையாவும்
விட்ட குறையாகும்
வேண்டாம் காதல்..ஓ..ஓ..ஓ..ஓ
எந்தன் வழி வேறு
உந்தன் வழி வேறு
ஏனோ கூடல் ஓ..ஓ..ஓ.ஓ.
உன்னுடைய வரவை எண்ணி
உள்ளவரை காத்திருப்பேன்
என்னைவிட்டு விலகிச் சென்றால் மறுபடித் தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே
நீ இதை ஏற்றுக் கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்ன்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா?
நெஞ்சில் வைத்து ஏற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?...
No comments:
Post a Comment