படம்: இதயக்கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வறண்டு பாடுகின்றேன்
(வானுயர்ந்த சோலையிலே)
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை
(வானுயர்ந்த சோலையிலே)
ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி...
எல்லா புகழும் இளையராஜா ஐயா அவருக்கே சேரும்
ReplyDeleteThank You
ReplyDelete