PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, January 13, 2012

ராஜ ராஜ சோழன் நான்...

படம் : ரெட்டைவால் குருவி (1987)
இசை : இளையராஜா

பாடியவர் :
K.J.யேசுதாஸ்
பாடல் வரி : வாலி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே...

5 comments:

  1. பாடல் வரிகளுக்கு சொந்தகாரர் கவிஞா் மு.மேத்தா அவர்கள் வாலி அல்ல

    ReplyDelete
  2. பாடல் மு.மேத்தா இயற்றியது. தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலே

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடலும்,அடிக்கடி இப்பாடலை கேட்டு ரசிப்பதர்க்கான காரணம் ஐேசுதாஸ் அவர்களின் குரலானது மிகவும் இனிமை.

    ReplyDelete
  4. Oru pona PATA mama

    ReplyDelete