PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, January 13, 2012

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா...

படம்: தென்காசிப்பட்டினம் (2002)
இசை: சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்: மனோ, சொர்ணலதா
பாடல்: வாலி


மயிலிறகே... மயிலிறகே...

மணிகிளியே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

ஹே.. மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்
ஊராரும் வேறாரும் காணாமலே
கண்ணா உன் உள்ளத்தை படம் பிடித்தேன்

மயிலிறகே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
மன்றாடும் பிள்ளை இது
கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
கண் மூடும் பிள்ளை இது

எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
எதுவும் உன் காட்சி தான்
அழகே நீயும் என் மனதில் பாய்கிற
ஆசை நீர் வீழ்ச்சி தான்

நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன்
நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்
நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன்
நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்

ஒ... மானே மானே மனதுக்குள்ளே
உனையின்றி இனிமேலே ஞாபகமில்லை
மயிலிறகே... மணிகிளியே...
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

பழி வாங்கி போனது பல ராத்திரி
உன்னால் நான் தூக்கம் கெட்டேன்
பனி வாடை காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன்

தூது வந்தது தகவல் தந்தது
தனிமை பொல்லாதது
உன் போல் என் மனம் உருகும் சங்கடம்
வெளியில் சொல்லாதது

எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
அவரோடு அவன் இங்கு அவனே சேர்த்தான்
உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனியில்லையே

என் அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூமாலை நீ தரும் நேரம்

மயிலிறகே... மயிலிறகே...
மயிலிறகே... மயிலிறகே...

மணிகிளியே... மணிகிளியே...
மணிகிளியே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா

மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மயிலிறகே... மயிலிறகே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

No comments:

Post a Comment