PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, January 13, 2012

எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்...

படம் : கல்கி(1996)
இசை : தேவா
பாடியவர் : K.S. சித்ரா, அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி : வெண்ணிலாகாந்தி

முத்து முத்து மகளே
முகம் காணாத மகளே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மனியே
நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்


எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
மலடியின் மகளே மகளேனும் கனவே
மடியினிலே நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...


முன்னூறு நாள் கர்ப்பத்திலே வாராத பெண் நீயடி
என்னாளுமே நான் பொம்மை தான் என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம் பாடியாய் பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய் பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம் நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...


சிந்தாமணி என் கண்மனி சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே பொன் ஊஞ்சல் நீயாடடி
குலாவும் அன்பு கோகிலம் எங்கேயும் கானம் பாடு
கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடை ஏது
விழாமலே விழும் மழை நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...


எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...
பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் சொல்வாரடி
வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது
பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஒது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே


வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
மலடியின் மகளே மகளேனும்
கனவே மடியினிலே நீ வா

பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒ
ரு கடிதம்....

No comments:

Post a Comment