படம்: காதலுடன்
இசை: SA .ராஜ்குமார்
பாடியவர்கள்:
பாடியவர்கள்:
பாடலாசிரியர் :- கலைக்குமார்
உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா
உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா
அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது
உச்சிக் கிளையிலே...
உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா
அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது
நூராண்டு வாழும் ஆசைகள் இல்லை
அன்போடு வாழும் ஒரு நாளும் போதுமே
கோவில்கள் செல்லும் தேவைகள் இல்லை
தெய்வங்கள் எல்லாம் நம் சொந்த பந்தமே
பரதனையும் ராமனையும் பாசத்தில் மிஞ்சிடுவோம்
அனுமனைப் போல் அணில்களைப் போல்
சேவையில் நின்றுடுவோம் ......
இதை கேட்கும் போதே கண்கள்
ஊருதே நீர்க்கோலம் போடுதே
அட சொந்தம் என்ற சொல்லில்
கோடி வேதங்கள் உள்ளதே
உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா
தீபங்கள் ஏற்றும் கார்த்திகை மாதம்
வாசல்கள் எல்லாம் பொண் வண்ணமாயிடும்
கல்யாண மேளம் கேட்டிடும் நேரம்
ரோயாப்பூ முகமோ நிலவாக மாறிடும்
தேரோடும் வீதியெல்லாம் தேவதை ஊர்கோலம்
பூவோடு பூவாக பூமகள் வைபோகம்
அந்த நாளை எண்ணி எண்ணி
கைகள் பூமாலை கோர்த்ததே
அது நாளை நாளை என்று
தேதித்தாழ் மட்டும் தீர்ந்ததே
உச்சிக் கிளையிலே
உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா
அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது
உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா...
No comments:
Post a Comment