PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, January 18, 2012

இதுவரை யாரும் பாடியதில்லை...

படம்: காதலுடன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: சீனிவாஸ்


இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன் ஆ...
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

வங்கக்கடல் ஆழம் அல்ல
வாணக்கரை நீளம் அல்ல
காதல் கடல் காதல் கடல்
ஆழத்தினை யார் சொல்ல

ஒ ... பெண்ணின் மனம் ஆழம் என்று
சொன்னவர்கள் கோடியுண்டு
ஆணின் மன ஆழத்தினை
சொன்னவர்கள் யாருண்டு

என்னுயிரே... மனதுக்குள் இருப்பதை வெளியிடவா
உயிருக்குள் காதலை மறைத்திடவா
மறுமுறை உனக்கென பிறந்திடவா
அதுவரை தனிமையில் அழுதிடவா

ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

மேகமதை தூதுவிட்டால்
பாதி வழி போகும் முன்பே
தூறல்களாய் மாறிவிடும்
என்று எண்ணி பயந்தாயா

அன்னமதை தூதுவிட்டால்
மெல்ல மெல்ல ஆடிச்செல்லும்
தாமதமாய் ஆகிவிடும்
என்று அதை தவிர்த்தாயா

என்னுயிரே... நிலவினை தூதென அனுப்பிவைத்தால்
பகலினில் பதிங்கிடும் என நினைத்தா
என்னை இன்று தூதாய் அனுப்பிவிட்டு
இதயத்தில் இடிகளை இறக்கி வைத்தாய்


ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன்

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா...

No comments:

Post a Comment