PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 31, 2012

நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்...

Movie name: 3 (Three) (2011)
Music: Anirudh
Singer(s): Swetha Mohan, Vijay Yesudas
Lyrics: Dhanush



நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எண்டும் இனி தேவை
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா...

No comments:

Post a Comment