PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 31, 2012

ஞாபகம் இல்லையோ என் தோழி...

Movie name: Gnabagangal
Music: James
Singer(s): S.P.Balasubramanium
Lyrics: Pa.Vijay


ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞன் எழுதிய எழுதிய
அழகிய அழகிய கவிதை நீ
உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ
எழுதிய என் பார்வை உனதில்லையா
தழுவிய உன் ஸ்வாசம் எனதில்லையா ஆஆஆஆ

நேற்றெல்லாம் நிஜமானது
காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே க..ன..வா..கிறது

ஒரு முறை கண்களில் பார்த்தது
ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே
இருதயம் விடுவதும் அழுவதும்
தொடுவதும் சுடுவதும் போதுமே

இதுவரை என் பேனா நின்றதில்லை
உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி...

No comments:

Post a Comment