படம்: காதலுடன்
இசை: SA .ராஜ்குமார்
பாடியவர்கள்: உன்னிக்கிருஷ்ணன் & ஹரிணி
பாடியவர்கள்: உன்னிக்கிருஷ்ணன் & ஹரிணி
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
அழகா உன்னை தினம் எதிர் பார்த்தேன்
நீ வரும் வழி பார்த்து நெற்றிக்கு பொட்டிட்டு
காதணி மூக்குத்தி கை வளையல் பூட்டி
கூந்தலில் மலர் சூடி துதித்து ததித்து நினைந்து உருகி
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
நீரலை மேலாடும் நுரைப்பூவைப் போல
நித்தமும் நினைவாலே தடுமாறினேனே
ஆலிலை மேலாடும் ஆகாயா வண்ணா
நான் என்ன நீ தீண்ட ஆகாத பெண்ணா
வா சடுதியிலே வாடும் இள மையிலே
வா சடுதியிலே வாடும் இள மையிலே
மிதிலை என்றால்தான் ஸ்ரீ ராமனாக
கைலை என்றால்தான் சிவரூபமாக
தணிகை என்றால் திருத்தணிகை என்றால்
வா கதிர்வேலனாக..
நீ வரும் பாதை பூவிதல் தூவி
விழி இமைக்காமல் தவமிருந்தேன்
உன் இரு விழிப்பார்வை ஒருமுறைக் காண
துதித்து ததித்து நினைந்து உருகி
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
ராமனின் திருப்பாதம் தொடவேண்டித்தானே
நீ சிறகு என்றால் நானும் இறகுகளாய்
எழுதி வைத்தேன் எழுதி வைத்தேன் நான்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
ராமனின் திருப்பாதம் தொடவேண்டித்தானே
நான் ஒரு கல் போல தெருவோரம் வாழ்ந்தேன்
ஆயுளில் ஒரு பாதி தினம் உன்னை தேடி
ஆயிரம் குடம் நீரை அபிசேகம் செய்தேன்
ஆயிரம் குடம் நீரை அபிசேகம் செய்தேன்
நீ சிறகு என்றால் நானும் இறகுகளாய்
நீ மனம் திறந்தாள் நானும் நினைவுகளாய்
ஏற்றுக்கொண்டேன் நான் சரிபாதி உன்னை
ஏற்றிவைப்பாய் நீ தீபம் நான் எண்ணெய்
எழுதி வைத்தேன் எழுதி வைத்தேன் நான்
உனக்காக என்னை ....
கண்ணனின் லீலை பாட்டிகள் சொன்ன
கதைகளில் மட்டும் கேட்டிருப்பேன்
மன்னன் முன் லீலை நேரினில் காண
துதித்து ததித்து நினைந்து உருகி
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
அழகே ....உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
அழகே ....உன்னை தினம் எதிர் பார்த்தேன்
எதிர் பார்த்தேன் எதிர் பார்த்தேன்...
No comments:
Post a Comment