PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, February 27, 2012

வெண்ணிலவே வெண்ணிலவே...

படம்: லேடிஷ் அண்ட் ஜென்டில்மேன்




வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா... (வெண்ணிலவே)
இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டி விட
வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா...

பெண்ணே அடி பெண்ணே
உன் உள்ளம் சுகமா?
பேசு ஒரு வார்த்தை
நீ கல்லா? மரமா?
அன்பே உன் கையில்
நான் விரலா? நகமா?
நகமாய் கலைந்தாயே
இது உனக்கே தகுமா?
இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே
நீ ஆணாய் பிறந்து வருவாய்
உன் போலே பெண்ணை நீ அப்போது
நேசித்தால்
என் நெஞ்சின் வேதனை அறிவாய்
உலகத்தின் முடிவை
எழுதியவன் அவனே
எனக்கு ஒரு முடிவை
ஏன் இன்னும் சொல்ல வில்லை
ஏன் இன்னும் சொல்ல வில்லை
அவன் ஊமை இல்லை இல்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா...

அன்பே என் கண்ணில்
தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால்
கொஞ்ச தூரம் மரணம்

உன்னால் அடி உன்னால்
என் ஆன்மா உருகும்.
உன்னை தினம் தேடி
நுரையீரல் கருகும்

எத்தனை காதலின் தோள்விகள்
உள்ளது பூமியின் ஆழத்தில் புதைந்து

அத்தனை சோகமும் வெளியில்
வந்தது என் இரு கண்களில் வழிந்து

உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே
அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி

வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிட வா...

No comments:

Post a Comment