Movie name: Marina (2012)
Music: Girishh G
Singer(s): Mukesh, Shilpa, Ramashankar
Lyrics: Na. Muthukumar
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே
வங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும்
பர பர பரவென பரபரக்கும்
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் concrete காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் road இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்
பச்சை மஞ்ச சிவபுலதான் signal இருக்கும்
அது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே..
சிங்கார சென்னை என்று சொல்லுவோம்
ஊர் எங்கும் poster ஒட்டி கொள்ளுவோம்
சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே
என்றாலும் விட்டு போக நினைகல..
இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா
இது இளைப்பாற இடம் தரும் தின்னையடா
நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா
இந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா
பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்
அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்
எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா
நம்ம ஒட்டு மொத்த தாயாக chennai இருப்பா
இப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா
அவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே...
No comments:
Post a Comment