PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, February 21, 2012

மரத்தை வச்சவன்...

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க
எண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பெதற்கு
சக்தி உள்ள உனக்கெல்லா சத்தியத்தில் தவிப்பென்ன
காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

No comments:

Post a Comment