PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, February 21, 2012

சங்கத் தமிழ்க் கவியே...

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா,
வரிகள்: வைரமுத்து



சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ
(சங்கத்..)

மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க
சாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
(சங்கத்..)

பூங்குயில் பேதைத்தனைத் தேடத்தான் ஆண் குயில் பாடியோட
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியாடாதோ
காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்
(சங்கத்..)


No comments:

Post a Comment