Movie name: Marina (2012)
Music: Girishh G
Singer(s): Haricharan, Manasi
Lyrics: Na. Muthukumar
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் அனல் தரும் வெயிலா?
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?
இந்த காதல் வனம் தரும் மகிலா?
மறைந்திடும் திகிலா? மாயம் தானா?
காதல் மின்னலின் துகளா?
மிரட்டும் இருளா? மாயவன் செயலா?
இந்த காதல் மலர்களின் திடலா?
முட்களின் தொடலா? காயம் தானா?
கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?
காதல் ஒரு தேவதையின் கனவா?
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?
காதல் கனவதன் கனவா?
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
இந்த காதல் கடவுளின் இனமா?
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
காதல் பிறவியின் பயனா?
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?
இந்த காதல் இம்சையின் மகனா?
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை..
பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா?
யாக நிலையா? பொய் பேசும் கலையா?
தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய?
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?...
No comments:
Post a Comment