PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Wednesday, February 22, 2012

கட்டி வச்சிக்கோ எந்தன்...

திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி
இசை: இளையராஜா




கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
இந்த நேரம்
பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ

இந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ

தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன

கன்னி மலர்களை நான் பறிக்க
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது

ஆயிரம் காலமே

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே

இந்த பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஒ ஒ...

No comments:

Post a Comment