PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, February 21, 2012

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி...

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

பெத்தெடுத்தவ யாரு
அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
(உள்ளுக்குள்ள..)

அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா
அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா

எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
ஒரு பொழுது அது விடியாதா
அட போடா உலகம் கெடக்குது கெடக்குது
(உள்ளுக்குள்ள..)

பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி

என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
புயலாச்சு பெரும் மழையாச்சு
இந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது
(உள்ளுக்குள்ள..)

No comments:

Post a Comment