படம்: நிலவே முகம் காட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், இளையராஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், இளையராஜா
கண்களின் தேவை என்ன தேனே
தென்றலை கண்டுக்கொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே
உள்ளத்தில் பார்வை உண்டு மானே
உண்மைக கண்டு சொல்லும் தேனே
நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை
காண கண் வேண்டுமா பேசச் சொல் வேண்டுமா
மலர் பூத்தண்டை வாசங்கள் சொல்லுமே
(தென்றலை..)
உன்னை பார்த்தொரு குயில் கூவுதே
அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா
உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே
ஈர காத்து காதல் சொல்லக் கண்டாயா
உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னை காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னை கண்டுக்கொள் என்று
நீ என் காதல் கண்டுக்கொள்வாயா
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு
(தென்றலை..)
நீல நிற வானத்தில வந்த நிலா இவள் தானோ
அமுதத்தில செஞ்ச உடம்போ
இல்ல தெறிச்சு விழுந்த விதையோ
தாமரை போல கண்ணுள்ளவளோ
இந்த மண்ணுக்கு ஆறுடை தருபவளோ
சோலை பூவனம் தேடும் பூவினம்
எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ
அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா
எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ
ஹோ சந்தன சந்திரனின் பாட்டு சந்தங்கள் சொன்னது நேற்று
சொல்லாத ஏக்கங்கள் சேர்த்து நீதானே என்னைத் தொட்ட காற்று
அதிகாலை மாலை இரவென்ன அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன
என்று மௌனத்தின் வாசலை திறப்பாய்
(தென்றலை..)
No comments:
Post a Comment