PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, February 7, 2012

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது...



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இதம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கடல் நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே


நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ பருகாத போதிலே உயிர்ப் பூ சருகாக உலரும்
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது


பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூகேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் காணாத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ...

No comments:

Post a Comment