PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, February 7, 2012

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்...

Movie name: Mayilu (2012)
Music: Ilaiyaraaja
Singer(s): Rita, Chinna Ponnu, Tippu, Thiruvudaiyan
Lyrics: ஜீவன்



கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம்
பத்து சிலாவுல எங்க தேடுனாலும் பாக்க முடியாத கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்

இளவெட்ட கல்லத்தூகும் மாப்ளைய தேடிடுவோம்
எள்ளகிடும் குணங்களும் இருகான்னு பாத்திடுவோம்
அண்ணன்மாரு பாத்துசொன்னா கல்லகூட கட்டிக்குவோம்
கோவப்படும் அம்பளைய கோணாம வெச்சுக்குவோம்

தாய்மாமன் சீதனமா வீச்சருவா கொடுப்போம்
வீச்சருவா சீதனமாகும் ???
தாய்மாமன் சீதனமா வீச்சருவா கொடுப்போம்
தங்கச்சி கலங்கி நின்றா கணீர தொடைப்போம்
ஊர விடு போகும் பொது உசுர விட்டு நடப்போம்
அண்ணமார எண்ணி எண்ணி உண்ணாம கிடப்போம்

பட்டு துணி கட்டி வாங்க
தேங்காய் போடு உடச்சுட்டு போங்க
கொட்டுது கொட்டுது வானம்
நீங்க கட்டுங்க தாலிக்கு சாரம்
போடுங்க போடுங்க ஆட்டம்
இது தண்டா நயமான கூட்டம்

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்

சொல்லித்தந்த வாதியையும் மறந்திட கூடாதே
பள்ளிகூட தோழியையும் விட்டுவிட கூடாதே
குப்பை வித்த காசுலதான் குண்டுமணி போடோமே
அப்பன் வீட்டு பெருமையே கொண்டுபோய் சேர்போமே

மாப்ளைக்கு தாழம் பூவ மலையாக கொடுப்போம்
மாப்ளைக்கு தாழம் பூவ மலையாக கொடுப்போம்
தங்கத்தை எழசெடுத்து தம்பாளதுல கொடுப்போம்
மருதாணி வாசத்தோடு மருமகளா இருப்போம்
நெத்திசுட்டி கலையாம மெதுவக நடப்போம்

பொன்னு விளையட்டும் போங்க அங்க பொங்கட்டும் பொங்கட்டும் வாழ்க்கை
பூத்தது பூத்தது மாலை எங்களை வாழ்த்திட வாழ்த்திட வாங்க
போடுங்க போடுங்க ஆட்டம் இதுதண்ட எங்க நயமான கூட்டம்

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம்
பத்து சிலாவுல எங்க தேடுனாலும் பாக்க முடியாத கல்யாணம்...

No comments:

Post a Comment