PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, February 7, 2012

பேசுகிறேன் பேசுகிறேன்...

படம்: சத்தம் போடாதே
வெளிவந்த வருடம்: 2007
பாடல்வரி : கவிஞர் தாமரை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: நேஹா பேசின்




பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா
(பேசுகிறேன்..)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே

பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே

விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா…

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா...

3 comments:

  1. Not தாமரை lyrics written by நா. முத்துகுமார்

    ReplyDelete
  2. இவை கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் வரிகள்... திருத்தம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. ARUN PRASATH T K RMarch 29, 2024 at 3:14 AM

    My evergreen favourite song

    ReplyDelete