பாடியவர் : ஜென்சி
இசை: இளையராஜா
பாடல்வரிகள் : கண்ணதாசன்
திரைப்படம் : நிறம் மாறாத பூக்கள்
லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
(இரு பறவைகள்)
சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
மானோடு
கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே
(இரு பறவைகள்)
பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும்
இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லலலாலா லாலா லலல்லலா...
No comments:
Post a Comment