சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித
நான் சிரிச்சுப்புட்டு திருப்பி தாரேன் சிநேகித
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித
நான் சிரிச்சுப்புட்டு திருப்பி தாரேன் சிநேகித
மனசு நினைக்காம உதடு மட்டும் சிரிக்காது
விலைக்கு கிடைக்காது வெளி நாட்டிலும் கிடைக்காது
அண்ணன் தர மாட்டன் பெத்த அப்பன் தர மாட்டன்
உன் தம்பி தங்கை மச்சான் மாமன் அத்தை மாமி
சொந்தம் பந்தம் எவனும் தர மாட்டன்
பிறந்ததது சிரிக்க தானே சிநேகித
அந்த சிரிப்பு இல்லாத வாழ்க்கை வேஸ்ட்டு சிநேகித
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித
நான் சிரிச்சுப்புட்டு திருப்பி தாரேன் சிநேகித
அட ஒன்ன தேதி ஆனா நம்ம மனிப்பர்சுக்கு சிரிப்பு
இருபத்தென்ன தேதி வந்த கடன் கொடுப்பவுனுக்கு சிரிப்பு
இந்த பொல்லா போன மனித சிரிப்பு குழந்தை சிரிப்பு சிரிப்பு
தவழும் வயசில நான் தாயின் மடியில் மேலிருந்து
முத்து முத்த சிரிச்சான் பாரு சிநேகித
நடக்கும் வயசில என் பாட்டியம்மா முதுகு மேல
அன்பு உதிர ஏறி சிரிச்சேன் சிநேகித
அன்னையிடம் தந்தையிடம் அன்பு சிந்த சிரிச்சேன்டா
நண்பர்களின் கூட்டத்திலே நல்லவே நான் சிரிச்சேன்டா
மொத்தமா புடவை கிட்ட சிரிப்ப அடகு வைச்சேன்டா
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித
நான் சிரிச்சுப்புட்டு திருப்பி தாரேன் சிநேகித
காந்தி சிரிப்பது ரூபா நோட்டு மேல தான் இருக்கு
நமக்கு அது இல்லை பரு சிநேகித
ஏழை சிரிப்புல நம்ம இறைவன் இருப்பது உண்மை தான்
ஏழை நாம சிரிப்பது போல் சிநேகித
சபை செய்யும் உழைப்பு அது தேச தாயின் சிரிப்புடா
ஜகத்துக்குள் இருக்கு அந்த தெய்வத்தோட சிரிப்புடா
நல்லவங்க சிரிப்புதுக்கு காலம் ஒன்னு பிறக்கும்டா
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித
நான் சிரிச்சுப்புட்டு திருப்பி தாரேன் சிநேகித
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித
நான் சிரிச்சுப்புட்டு திருப்பி தாரேன் சிநேகித
மனசு நினைக்காம உதடு மட்டும் சிரிக்காது
விலைக்கு கிடைக்காது வெளி நாட்டிலும் கிடைக்காது
அண்ணன் தர மாட்டன் பெத்த அப்பன் தர மாட்டன்
உன் தம்பி தங்கை மச்சான் மாமன் அத்தை மாமி
சொந்தம் பந்தம் எவனும் தர மாட்டன்
பிறந்ததது சிரிக்க தானே சிநேகித
அந்த சிரிப்பு இல்லாத வாழ்க்கை வேஸ்ட்டு சிநேகித
சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித
நான் சிரிச்சுப்புட்டு திருப்பி தாரேன் சிநேகித...
No comments:
Post a Comment